குழந்தை திருமணம் குறித்த புகார்களில் 12 வழக்குகளுக்கு தீர்வு- கலெக்டர் ரமேஷ் தகவல்


குழந்தை திருமணம் குறித்த புகார்களில் 12 வழக்குகளுக்கு தீர்வு-  கலெக்டர் ரமேஷ் தகவல்
x

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் குழந்தை திருமணம் குறித்து வந்த 17 புகார்களில் 12 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

சிக்கமகளூரு:

குழந்தைகள் திருமணம்

சிக்கமகளூரு மாவட்டம் கலெக்டர் ரமேஷ் தனது அலுவலகத்தில் பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது. அப்போது கலெக்டர் பேசியபோது கூறியதாவது:-

கடந்த ஆண்டு குழந்தை திருமணம் குறித்து 26 புகார்கள் வந்தது. அந்த புகாரின் ேபரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் 25 வழக்கிற்கு தீர்வு கண்டுள்ளனர். அதே போல கடந்த 6 மாதத்தில் 17 குழந்தை திருமணம் குறித்து புகார்கள் வந்தது. இதில் 12 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதேபோல பெண்களுக்கு எதிரான குடும்ப பிரச்சினை தொடர்பாக 28 புகார்கள் வந்தன. அவற்றில் 14 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இன்னும் 14 வழக்கிற்கு தீர்வு காணவேண்டி இருக்கிறது.

ரூ.1.34 லட்சம் நிதி

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் ரூ.1.34 கோடி நிதி கிடைத்துள்ளது. இந்த நிதி அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதன் மூலம் 1,369 பேர் பயனடைவார்கள். இதேபோல அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாதுகாப்பு மையங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story