வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்-ரேவண்ணா எம்.எல்.ஏ. பேட்டி


வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்-ரேவண்ணா எம்.எல்.ஏ. பேட்டி
x

வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றவேண்டும் என்று ரேவண்ணா எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

ஹாசன், ஆக.30-

முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ரேவண்ணா எம்.எல்.ஏ., ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹாசன் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து விவசாய பயிர்கள் நாசமானது. மேலும் வீடுகள் இடிந்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு ஹாசன், குடகு ஆகிய 2 மாவட்டங்களுக்கு சேர்த்து ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மழை பாதிப்பு குறைவான வடகர்நாடக மாவட்டத்திற்கு மட்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹாசனுக்கு கூடுதல் நிதி ஒதுக்காததது ஏன். மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தினமும் காணொளி காட்சி மூலம் பேசி வருகிறார். ஆனால் நேரில் சென்று ஆய்வு நடத்துவது இல்லை. அதிகாரிகள் கூறும் தகவலை மட்டும் பெற்று கொள்கிறார். எனவே, மழை பாதித்த இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றவேண்டும். விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவேண்டும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பல பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரம் செய்து வந்தனர். தற்போது ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து நாட்ைட ஆட்டிப்படைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story