36 பேரிடம் ரூ.1 கோடியே 36 லட்சம் மோசடி- நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு

மும்பை,
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அர்ச்சிட் எண்டர்பிரைசஸ் என்ற நிதி நிறுவனத்தில் அதிக வட்டி கிடைப்பதாக நம்பி பணத்தை முதலீடு செய்திருந்தார். ஆரம்பத்தில் வருமானம் பெற்று வந்த நபருக்கு கடந்த சில மாதங்களாக வருமானம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட நபர் நிறுவன உரிமையாளரிடம் தான் முதலீடு செய்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, சில நாட்களில் தருவதாக தெரிவித்ட்ஹ்உள்ளார்.
இந்தநிலையில் நிறுவன உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். இது பற்றி மரின்லைன் போலீசில் அந்த நபர் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நிறுவன உரிமையாளர் மந்திராலயாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் காவலாளிகள் என 36 பேரிடம் ரூ.1 கோடியே 28 லட்சம் வரையி்ல மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உரிமையாளரை வலைவீசி தேடிவருகின்றனர்.






