விமான நிலையத்தில் ரூ.1½ கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்- 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

விமானத்தில் கடத்தி செல்ல முயன்ற ரூ.1½ கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
விமானத்தில் கடத்தி செல்ல முயன்ற ரூ.1½ கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோதனை
மும்பை விமான நிலையத்தில் கடந்த 11-ந்தேதி இரவு வழக்கம் போல் விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரவிந்த் ஷா, அனிஷா அங்கித் ஷா, நீதா ரிங்கேஷ் ஜெயின் ஆகிய பயணிகளின் உடைமைகளில் சந்தேகப்படும்படியாக பார்சல் இருந்ததை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து அந்த உடைமைகளை பெற்று பிரித்து சோதனை போட்டனர்.
3 பேர் கைது
இதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து விமானத்தில் கடத்தி செல்ல முயன்ற 3 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






