11 வார்டுகளில் குடிநீர் வினியோகம் 10 சதவீதம் ரத்து


11 வார்டுகளில் குடிநீர் வினியோகம் 10 சதவீதம் ரத்து
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பைப்லைன் பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு 11 வார்டுகளில் குடிநீர் வினியோகம் 10 சதவீதம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பை,

பைப்லைன் பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு 11 வார்டுகளில் குடிநீர் வினியோகம் 10 சதவீதம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2 நாட்களாக தொடரும் பணி

மும்பையில் குடிநீருக்காக பைப்லைன் பழுதுபார்க்கும் பணி மாநகராட்சி சார்பில் வருகிற 9-ந்தேதி முதல் தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக 11 வார்டுகளில் குடிநீர் வினியோகம் 10 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில், பைப்பைன் பழுதுபார்க்கும் பணி அன்றைய தினத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கி 11-ந்தேதி காலை 10 மணி வரை 2 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

பாதிக்கப்படும் இடங்கள்

இதன் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் 11 வார்டுகளான எம் கிழக்கு, மேற்கு, டி வார்டுகளான முல்லுண்டு கிழக்கு, மேற்கு, எஸ் வார்டுகளான பாண்டுப் கிழக்கு, நாகுர், காஞ்சூர்மார்க், விக்ரோலி கிழக்கு, என் வார்டுகளான விக்ரோலி கிழக்கு, காட்கோபர் கிழக்கு- மேற்கு, எல் வார்டுகளான குர்லா கிழக்கு, மேலும் பி, இ, எப் தெற்கு, வடக்கு, ஏ வார்டுகளான மும்பை துறைமுகம், கடற்படை பகுதி போன்ற இடங்களில் வருகிற 2 நாட்களில் 10 சதவீதம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரை செலவழித்து ஒத்துழைப்பு தருமாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story