10, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலஅவகாசம்

10,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
10,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்
மராட்டிய மாநில உயர்நிலை கல்வி வாரியம் (எம்.எஸ்.பி.எஸ்.எச்.எஸ்.இ) 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான தனி தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த 31-ந் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்த நிலையில் கால அவகாசத்தை நேரத்தை நீட்டிக்குமாறு கல்வி வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதற்கான காலக்கெடுவை வருகிற 25-ந் தேதி நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.
இது பற்றி உயர்நிலை கல்வி வாரிய செயலாளர் அனுராதா ஓக் கூறியதாவது:-
கட்டணம்
தனித்தேர்வர்கள் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திறந்த வெளி மையங்களில் பயின்று வரும் மாணவர்கள் அதிகரித்து வருவதை கவனித்து தேர்வு எழுத வசதியாக காலக்கெடுவை நீட்டித்து உள்ளோம். இதில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு வயது வரம்பு இல்லை. 10-ம் வகுப்பிற்கு ரூ.1,000-ம், 12-ம் வகுப்பிற்கு 500 ஆக பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ரூ.100 செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்ய கடைசி வாய்ப்பாக வழங்கி உள்ளோம். படிவத்தை நிரப்பி மின்னஞ்சல் முகவரியில் ஆதார் அட்டை, புகைப்படம், செல்போன் நம்பர் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






