திருமண கோஷ்டி கூட்டத்தில் புகுந்த கார்- 11 பேர் காயம்


திருமண கோஷ்டி கூட்டத்தில் புகுந்த கார்- 11 பேர் காயம்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தானே,

உல்லாஸ்நகரை சேர்ந்தவர் விஷால். இவரது உறவினரின் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. சாஸ்திரி நகர் பகுதி அருகே திருமணகோஷ்டியினர் நடனமாடியபடி மாப்பிளையை காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது காரை ஓட்டி வந்த விஷால் பிரேக்விற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்தாக தெரிகிறது. இதனால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. காரின் முன்பு நடனமாடி சென்ற திருமண கோஷ்டியினர் கூட்டத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story