போலி ஆவணங்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்த 13 பேர் சிக்கினர்

போலி ஆவணங்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்த 13 பேரை கைது செய்த போலீசார் 2 ஆயிரம் சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
மும்பை,
போலி ஆவணங்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்த 13 பேரை கைது செய்த போலீசார் 2 ஆயிரம் சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
போலி ஆவணங்களுக்கு சிம் கார்டு
மும்பையில் போலி ஆவணங்களுக்கு அதிகளவில் சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தொழில்நுட்ப துறையினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது 62 புகைப்படங்களை பயன்படுத்தி 8 ஆயிரத்து 500 சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் ஒரே நபரின் புகைப்படத்தை பயன்படுத்தி 695 சிம் கார்டுகள் வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
13 பேர் கைது
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி ஆவணங்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்த 13 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிம் கார்டு விற்பனையாளர்கள், ஏஜெண்டு, கால் சென்டர் உரிமையாளர்கள் ஆவர். மேலும் வி.பி. ரோடு, டி.என்.நகர், மலபார்ஹில், சகார், பாங்குர் நகர் ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது 2 ஆயிரத்து 197 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர மிராரோடு பகுதியில் உள்ள கால்சென்டரில் சோதனை நடத்தி 52 சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.






