ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வாகனத்தில் இருந்த ரூ.2¾ கோடியுடன் தப்பி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது- மற்றொருவருக்கு வலைவீச்சு


ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வாகனத்தில் இருந்த ரூ.2¾ கோடியுடன் தப்பி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது- மற்றொருவருக்கு வலைவீச்சு
x

கோரேகாவில் ரூ.2.80 கோடியுடன் தப்பி சென்ற டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

கோரேகாவில் ரூ.2.80 கோடியுடன் தப்பி சென்ற டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்துடன் தலைமறைவு

மும்பை கோரேகாவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வாகன டிரைவராக இருந்து வந்தவர் உதய்பான் சிங் (வயது34). இந்த நிறுவனம் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தது. சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்து ரூ.5 கோடி ரொக்கத்துடன் வங்கி ஊழியர்கள் உடன் சென்றனர்.

வாகனத்தை டிரைவர் உதய்பான் சிங் ஓட்டி சென்றார். பட்கர் கல்லூரி அருகே உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு வங்கி ஊழியர்கள் பணம் நிரப்ப சென்றனர். அப்போது ரூ.2 கோடியே 80 லட்சத்துடன் உதய்பான் சிங் வாகனத்துடன் தலைமறைவாகி விட்டார். இது பற்றி வங்கி ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். வாகனத்தில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த வாகனம் கோரேகாவ் ரெயில் நிலையம் செல்லும் வழியில் பிரமல் நகர் பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் அவருடன் மேலும் 2 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆட்டோ மூலம் தகிசர் சுங்கச்சாவடியை கடந்த பின்னர் மற்றொரு வாகனத்தில் 3 பேர் ஏறி பணத்துடன் நாலாச்சோப்ரா சென்றது தெரியவந்தது.

இதில் ஒருவர் நாய்காவை சேர்ந்த மெக்கானிக் ஆகாஷ்குமார் யாதவ் (32) என அடையாளம் தெரியவந்தது. போலீசார் அங்கு சென்றபோது தலைமறைவான டிரைவர் உதய்பானு சிங், ஆகாஷ் குமார் யாதவ் ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 3-வது நபரை பிடிக்க அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story