பருப்பு சோறு சாப்பிட்ட 2 சிறுவர்கள் சாவு


பருப்பு சோறு சாப்பிட்ட 2 சிறுவர்கள் சாவு
x

விராரில் பருப்புசோறு சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசாய்,

விராரில் பருப்புசோறு சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயிற்று வலி

பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்தவர் அஸ்பக் கான். ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஆசிப் (வயது9), பர்ஹிப் (8) உள்பட 5 குழந்தைகள் இருந்தனர். கடந்த 12-ந்தேதி இரவு வீட்டிற்கு வந்த அஸ்பக் கான் வீட்டில் சமைத்து வைத்திருந்த பருப்பு சோற்றை மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அனைவரும் தூங்கச்சென்றனர். இந்தநிலையில் மறுநாள் அதிகாலை 1.30 மணி அளவில் ஆசிப், பர்ஹிப் ஆகிய 2 சிறுவர்களும் வயிற்று வலி ஏற்பட்டு துடித்தனர்.

இதனால் பதறிப்போன அஸ்பக் கான் மகன்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் சிகிச்சை அளித்த நிலையில், குழந்தைகள் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்தார்.

2 சிறுவர்கள் பலி

ஆனால் அஸ்பக் கான் காலை விடிந்த பின்னர் 2 மகன்களையும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக டாக்டரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 சிறுவர்களின் உடல்நிலை மோசமானது. இந்தநிலையில் அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, உணவு மாதிரிகளை கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story