கசாரா ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் கைது


கசாரா ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-26T00:15:15+05:30)

கசாரா ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

கசாரா ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கசாரா ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்களாக நடித்து பயணிகளிடம் மோசடி செய்து வருவதாக கல்யாண் ரெயில்வே போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் கசாரா ரெயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.

இதில் டிக்கெட் பரிசோதகர்கள் சிரூடை அணிந்த நிலையில் 2 பேர் பயணிகளிடம் டிக்கெட் சோதனை பணியில் ஈடுபட்டு இருந்ததை கண்டனர்.

2 பேர் சிக்கினர்

போலீசார் அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி தெரிவித்தனர். அதனை வாங்கி பார்த்த போது போலியானது என தெரியவந்தது. உடனே 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களது பெயர் ரோகிதாஸ் கெய்க்வாட் (வயது30), சந்தீப் பவார் (27) என்பதும், இவர்கள் டிக்கெட் எடுக்காத பயணிகளை ஏமாற்றி பணம் பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story