லாரி மீது கார் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி


லாரி மீது கார் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:13+05:30)

மும்பை,

நவிமும்பை உரண் தாலுகா அவாரே கிராமத்தை சேர்ந்தவர் அலங்கார் பாட்டீல்(வயது39). இவரது பால்ய நண்பர் மோனிந்தர் (39). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் காரில் வெளியே சென்றனர். பாலஸ்பே-ஜே.என்.பி.டி சாலையில் கார் சென்ற போது சாலை திருப்பத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த பன்வெல் போலீசார் 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story