மின்னல் தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலி


மின்னல் தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

தானே,

மின்னல் தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

மின்னல் தாக்கியது

தானே மாவட்டம் பிவண்டியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது பாட்சா நதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சிறுமி உள்பட 4 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது பற்றி அறிந்த மாநகராட்சி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

2 பேர் பலி

படுகாயமடைந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியானவர்கள் சீத்தல் அங்குஷ் வாகே (வயது17), யோகிதா தினேஷ் வாகே (20) என்பது தெரியவந்தது. மின்னல் தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story