60 மாடி இரட்டை கோபுரத்துக்குள் நுழைந்த ரஷிய நாட்டினர் 2 பேர் கைது


60 மாடி இரட்டை கோபுரத்துக்குள் நுழைந்த ரஷிய நாட்டினர் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தார்டுதேவில் உள்ள 60 மாடி இரட்டை கோபுர கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரஷிய நாட்டினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

தார்டுதேவில் உள்ள 60 மாடி இரட்டை கோபுர கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரஷிய நாட்டினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

60 மாடி இரட்டை கோபுரம்

மும்பை தார்டுதேவ் பகுதியில் 60 மாடிகளை கொண்ட 'தி இம்பிரியல்' என்ற இரட்டை கோபுர கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மிகப்பெரும் பணக்காரர்கள், முக்கிய நபர்கள் வசித்து வருகின்றனர். இதனால் இந்த 2 இரட்டை கோபுரம் எப்போதும் பாதுகாவலர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.

இருப்பினும் நேற்று முன்தினம் எப்படியோ இந்த கட்டிடத்துக்குள் மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்து விட்டனர். இதை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் காவலாளிகள் பார்த்தனர். மர்ம நபர்கள் படிக்கட்டு வழியாக மேல் மாடிக்கு சென்று கொண்டு இருந்தனர். உடனடியாக காவலாளிகள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பரபரப்பு

போலீசார் வந்தவுடன் 2 பேரும் 28-வது மாடியில் இருந்து கீழே ஓடிவந்தனர். அவர்கள் 5-வது மாடிக்கு வந்தவுடன் அங்கு இருந்து அருகில் உள்ள மலைப்பகுதியில் குதித்தனர். அப்போது அவர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. எனினும் ஒருவர் அங்குள்ள காட்டு பகுதியில் நுழைந்து ஒளிந்து கொண்டார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார்.

போலீசார் காட்டில் ஒளிந்த நபரை வெளியே வந்து சரணடையுமாறு ஒலிப்பெருக்கியில் எச்சரித்தனர். இதையடுத்து அவர் போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவத்தால் நேற்று இரட்டை கோபுர தார்டுதேவில் உள்ள 60 மாடி இரட்டை கோபுர கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரஷிய நாட்டினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கட்டிட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷிய யூ-டியூபர்கள்

பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் ரஷியா நாட்டை சேர்ந்த யூ-டியூப் பிரபலங்கள் மாக்சிம் ஷெர்பகோவ் (வயது25), ரோமன் புரோஷின் (33) என்பது தெரியவந்தது.

இவர்கள் சாகசத்தில் ஈடுபட 60 மாடி கட்டிடத்திற்கு நுழைந்ததும் தெரியவந்தது. படிக்கட்டு வழியாக கட்டிடத்தின் 58-வது மாடி வரை சென்று, அங்கு இருந்து வெளிப்பகுதி வழியாக கீழே இறங்கி சாகசத்தில் ஈடுபடவும், அதை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவிட திட்டமிட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஷியா நாட்டு யூ-டியூபர்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாடப்படும் வேளையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மும்பையில் உள்ள 60 மாடி இரட்டை கோபுரத்துக்குள் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story