அரியவகை பறவையான 2 சரஸ் கொக்குகள் மின்சாரம் தாக்கி பலி


அரியவகை பறவையான 2 சரஸ் கொக்குகள் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:32+05:30)

அரியவகை பறவையான 2 சரஸ் கொக்குகள் மின்சாரம் தாக்கி பலியாகின.

கோண்டியா,

கோண்டியா பகுதியில் அரியவகை பறவைகளான சரஸ் கொக்குகள் வசித்து வருகின்றன. நேற்று முன்தினம் கம்தா கிராமம் வழியாக செல்லும் மின்கம்பிகள் அருகே 2 சரஸ் கொக்குகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்று பலியாகி கிடந்த கொக்குகளை மீட்டனர். அவை மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கலாம் எனவும், இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் வன அதிகாரி ராஜேந்திரா தெரிவித்தார்.

இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் சரஸ் கொக்குகள் பாதுகாக்கப்பட்ட இனமாக பட்டியல் இடப்பட்டு உள்ளது. இந்த பறவைகள் கோண்டியா உள்பட விதர்பா பகுதியில் தென்பட்டு வருகிறது. சரஸ் கொக்குகள் மிக உயரமாக பறக்கும் தன்மை கொண்டது எனவும், கோண்டியாவில் அதன் எண்ணிக்கை 34 ஆக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story