உறைவிட பள்ளியில் உணவு சாப்பிட்ட 2 மாணவர்கள் திடீர் சாவு

உறைவிட பள்ளியில் உணவு சாப்பிட்ட 2 மாணவர்கள் திடீரென உயிரிழந்தனர்.
நாசிக்,
உறைவிட பள்ளியில் உணவு சாப்பிட்ட 2 மாணவர்கள் திடீரென உயிரிழந்தனர்.
இரவு உணவு
நாசிக் மாவட்டம் இகாத்புரி அருகே உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு, உறைவிட பள்ளியில் படிக்கும் 8 மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டனர்.
இதை சாப்பிட்டதும் அவர்களுக்கு உடல்நிலை மோசமானது. வாந்தி மற்றும் வயிற்று போக்கு காரணமாக அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள இகாத்புரி கிராம ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பரிதாப சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி பிவண்டியை சேர்ந்த ஹர்ஷல் போயர்(வயது23), நாசிக்கை சேர்ந்த முகமது ஜபர்சேக்(10) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் 2 மாணவர்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் நாசிக் மாவட்ட ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் உண்ட உணவு விஷமானதால் இந்த சோக சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவருகிறது. இதை உறுதிப்படுத்த உணவு மாதிரிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






