விபத்தில் 11-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலி

தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதி 11-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
மும்பை,
தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதி 11-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
தடுப்பு சுவரில் மோதியது
மும்பை குர்லா மேற்கு சகாகர் சால் பகுதியை சேர்ந்தவர் ஹிமேஷ் (வயது17). குர்லா பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மதியம் சலூனுக்கு முடிவெட்ட சென்றார். முடிவெட்டிய பிறகு அவர் நண்பர்களான 11-ம் வகுப்பு படிக்கும் லக்சயா ஜெய்ஸ்வால், அனிஷ்குப்தா ஆகியோருடன் ஸ்கூட்டரில் சென்றார். ஹிமேஷ் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
சாந்தாகுருஸ்-செம்பூர் லிங் ரோட்டில் சென்ற போது முன்னால் சென்ற கார் திடீரென பாதை (லேன்) மாறியதாக கூறப்படுகிறது. இதனால் ஹிமேச்இன் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் அந்த பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இதில் மாணவர்கள் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஹிமேஷ், லக்சயா ஜெய்ஸ்வால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். அனிஷ்குப்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் 11-ம் வகுப்பு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குர்லா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






