15-வது மாடியில் இருந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

ஒர்லியில் டிராலி அறுந்து 15-வது மாடியில் இருந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மும்பை,
ஒர்லியில் டிராலி அறுந்து 15-வது மாடியில் இருந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தவறி விழுந்த தொழிலாளர்கள்
மும்பை ஒர்லி நாக்கா ஆச்சார்யா அட்ரே சவுக் பகுதியில் 15 மாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று மாலை 4.33 மணியளவில் 2 தொழிலாளர்கள் கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடி பகுதியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அந்தரத்தில் டிராலியில் தொங்கியபடி அவர்கள் கண்ணாடியை துடைத்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென டிராலி கயிறு அறுந்தது. இதனால் தொழிலாளர்கள் 15-வது மாடி உயரத்தில் இருந்து டிராலியுடன் தரையில் விழுந்தனர்.
2 பேர் பலி
இதில் படுகாயமடைந்த 2 தொழிலாளர்களும் நாயர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.
ஜன்னல் கண்ணாடியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் தவறி விழுந்து பலியான சம்பவத்தால் அந்த பகுதயில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






