புனே ஓட்டலில் பயங்கர தீ விபத்து- 2 தொழிலாளிகள் பலி


புனே ஓட்டலில் பயங்கர தீ விபத்து- 2 தொழிலாளிகள் பலி
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புனே ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக உள்ளே சிக்கி இருந்த 2 தொழிலாளிகள் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

புனே,

புனே ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக உள்ளே சிக்கி இருந்த 2 தொழிலாளிகள் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தீ விபத்து

புனே மார்க்கெட் யார்டு பகுதியில் ரேவன் சித்தி என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலின் இரும்பு ஷட்டர் வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் தீ விபத்தினை யாரும் அறியவில்லை. மேலும் கரும்புகை ஷட்டரின் இடைவெளி வழியாக வந்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே சென்றனர்.

2 பேர் பலி

கடையின் உள்ளே சிக்கி இருந்த 3 பேர் மயங்கிய நிலையில் இருந்ததை கண்ட வீரர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டலில் பற்றிய தீயை சிறிது நேரத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டலில் இருந்த 4 சிலிண்டர்களை பாதுகாப்பாக அகற்றினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story