விராரில் மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலி

விராரில் மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மும்பை,
விராரில் மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மரத்தில் மோதியது
மும்பை விரார் பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ். இவர் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு விரார் பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்கு விருந்துக்கு சென்றார். விருந்து முடிந்து நேற்று அதிகாலை அவர்கள் வீடு திரும்பினர். காரை ஜெயேஷ் ஓட்டி வந்தார். கார் விரார் கிழக்கு சந்தன்சர் பகுதியில் உள்ள ராய்பாடா பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்தது.
இதில் தறிகெட்டு ஓடிய கார் மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையோர மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் காரின் பின் சீட்டில் இருந்த திபேஷ் (வயது22), ஜடின் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முன் சீட்டில் இருந்தவர்கள் ஏர் பேக்கால் உயிர் பிழைத்தனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து சென்ற போலீசார் பலியான 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லேசான காயமடைந்த ஜெயேஷ் உள்ளிட்ட 2 பேரை சிகிச்சைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயேஷ் கார் ஒட்டும் போது மதுபோதையில் இருந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






