தாராவியில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

மும்பை,
தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவை கலந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மும்பை தாராவி 90 அடிசாலையில் விழித்தெழு இயகத்தினர் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்களை கைது செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை நடைபெறும் கிராமங்களை அடையாளம் கண்டு, அங்கு நடைபெறும் தீண்டாமை கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்தநிலையில் உரிய அனுமதி இன்றி போராட்டம் நடத்திய 20 பேரை தாராவி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் தாராவியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






