சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; 2 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; 2 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Jun 2022 11:51 AM GMT (Updated: 14 Jun 2022 12:12 PM GMT)

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் உள்பட 2 பேருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் உள்பட 2 பேருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் தொல்லை

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அங்குள்ள மளிகை கடைக்கு சென்றார். அதே பகுதியை சேர்ந்த டிரைவராக வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவர் கூட்டாளிகள் உதவியுடன் சிறுமியை காரில் கடத்தி சென்றார். பின்னர் அவர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வீடியோவை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.

20 ஆண்டு கடுங்காவல்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 15 பேர் அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். விசாரணை நிறைவில் அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானது.

இதனை தொடர்ந்து வாலிபர் மற்றும் கூட்டாளி 2 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், உடன் இருந்த மற்றொரு கூட்டாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.



Next Story