மாநில செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.10½ லட்சம் மோசடி; 4 பேர் கைது + "||" + Fraud to graduate young men 4 arrested

அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.10½ லட்சம் மோசடி; 4 பேர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.10½ லட்சம் மோசடி; 4 பேர் கைது
நாசிக்கில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டதாரி வாலிபர் நாசிக் மண்டல பழங்குடியின மேம்பாட்டு துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை சமீபத்தில் 9 பேர் கொண்ட கும்பல் ‘ஹேக்’ செய

நாசிக்கில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டதாரி வாலிபர்

நாசிக் மண்டல பழங்குடியின மேம்பாட்டு துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை சமீபத்தில் 9 பேர் கொண்ட கும்பல் ‘ஹேக்’ செய்து, அதில் அரசுக்கு சொந்தமான ஆசிரம பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பணி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனை நம்பிய சந்தீப் பாட்டீல் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர், ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து, ரூ.17 லட்சம் செலுத்தினால் அரசு பணி கிடைக்கும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

ரூ.10½ லட்சம் மோசடி

இதனை நம்பிய சந்தீப் பாட்டீல், தவணை முறையில் ரூ.10½ லட்சம் வரை அக்கும்பலிடம் செலுத்தினார். அதன்படி, அவருக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது. அதில், பழங்குடியின மேம்பாட்டு துறையின் ‘சீல்’ மற்றும் கையெழுத்து இடம்பெற்றிருந்தது.

பின்னர், தான் அந்த பணி நியமன கடிதம் போலி என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் அவருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த சந்தீப் பாட்டீல், இதுபற்றி உள்ளூர் போலீசில் புகார் செய்தார்.

4 பேர் கைது

இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை கைதுசெய்தனர். விசாரணையில், அவர்கள் தானே பயந்தரை சேர்ந்த உதயநாத் சிங், துலேயை சேர்ந்த ஹேமந்த் பாட்டீல்(வயது31), சுரேஷ் பாட்டீல்(34) மற்றும் ஜல்காவை சேர்ந்த துக்காராம் பவார்(26) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான கார், மடிக்கணினி, கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.