தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

மாநில செய்திகள்

ஆபரே‌ஷன் தியேட்டரில் கரப்பான் பூச்சி அறுவை சிகிச்சையை நிறுத்திய டாக்டரால் பரபரப்பு + "||" + Operation Theatre Cockroach

ஆபரே‌ஷன் தியேட்டரில் கரப்பான் பூச்சி அறுவை சிகிச்சையை நிறுத்திய டாக்டரால் பரபரப்பு

ஆபரே‌ஷன் தியேட்டரில் கரப்பான் பூச்சி அறுவை சிகிச்சையை நிறுத்திய டாக்டரால் பரபரப்பு
தானேயில் 500 படுக்கை வசதிகொண்ட சத்ரபதி சிவாஜி மாநகராட்சி ஆஸ்பத்திரி உள்ளது. தானே மற்றும் அதை சுற்றி உள்ள மக்கள் இங்கு தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தன்று அந்த ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சஞ்சய் பரன்வால் 45 வயது நபர் ஒருவருக்க

தானேயில் 500 படுக்கை வசதிகொண்ட சத்ரபதி சிவாஜி மாநகராட்சி ஆஸ்பத்திரி உள்ளது. தானே மற்றும் அதை சுற்றி உள்ள மக்கள் இங்கு தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தன்று அந்த ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சஞ்சய் பரன்வால் 45 வயது நபர் ஒருவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய இருந்தார். அவர் அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருந்தபோது, ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் கரப்பான் பூச்சி ஒன்று சுற்றியது. இதைப்பார்த்து அவர் தனது அறுவை சிகிச்சையை தொடங்காமல் நிறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் மிகுந்த பராமரிப்பு அவசியம் உள்ள ஆபரே‌ஷன் தியேட்டரில் கரப்பான் பூச்சி சுற்றித்திரியும் சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை முறையாக பராமரிக்க மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.