மாநில செய்திகள்

தானே நிதி நிறுவன கொள்ளை வழக்கு: 3 பேர் கைது; ரூ.77¼ லட்சம் தங்கநகைகள் மீட்பு + "||" + Thane fund robbery case

தானே நிதி நிறுவன கொள்ளை வழக்கு: 3 பேர் கைது; ரூ.77¼ லட்சம் தங்கநகைகள் மீட்பு

தானே நிதி நிறுவன கொள்ளை வழக்கு: 3 பேர் கைது; ரூ.77¼ லட்சம் தங்கநகைகள் மீட்பு
தானே நிதிநிறுவனத்தில் கொள்ளைபோன வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.77¼ லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.. துளைபோட்டு கொள்ளை தானே உல்லாஸ்நகர், கேம்ப் எண் 4–ல் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிதிநிறுவன

தானே நிதிநிறுவனத்தில் கொள்ளைபோன வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.77¼ லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன..

துளைபோட்டு கொள்ளை

தானே உல்லாஸ்நகர், கேம்ப் எண் 4–ல் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிதிநிறுவனத்தில் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தன்று, சுவரில் துளைபோட்டு மர்ம ஆசாமிகள் ரூ.7 கோடியே 22 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் மும்பை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விட்டல்வாடி போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் உல்லாஸ்நகர் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அக்தர் சேக்(வயது44) என்பவர் நவிமும்பை துர்பே பகுதிக்கு வர இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அக்தர் சேக்கை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அக்தர் சேக்கின் கூட்டாளிகளான துர்பே பகுதியில் பதுங்கி இருந்த கம்ருதீன்(28), மனோஜ்(35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் ரூ.77 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளையும் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.