மாநில செய்திகள்

வீட்டில் போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் மலேசியாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 14 ஆண்டு ஜெயில் மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு + "||" + 2 persons from Malaysia Each 14-year jail

வீட்டில் போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் மலேசியாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 14 ஆண்டு ஜெயில் மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

வீட்டில் போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் மலேசியாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 14 ஆண்டு ஜெயில் மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்த வழக்கில் மலேசியாவை சேர்ந்த 2 பேருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. 12 கிலோ போதைப்பொருள் மலேசியாவை சேர்ந்தவர்கள் ரவீந்திரன், குணசேகரன். இவர்கள் மும்பை காந்திவிலி, தாக்

மும்பை,

வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்த வழக்கில் மலேசியாவை சேர்ந்த 2 பேருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

12 கிலோ போதைப்பொருள்

மலேசியாவை சேர்ந்தவர்கள் ரவீந்திரன், குணசேகரன். இவர்கள் மும்பை காந்திவிலி, தாக்குர்லி பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2008–ம் ஆண்டு இவர்களின் வீட்டில் இருந்து 7 கிலோ எம்.டி. போதைப்பொருள் மற்றும் 5 கிலோ எபெட்ரின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து ரவீந்திரன், குணசேகரன் இருவரும் மும்பை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

14 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு போதைப்பொருளை பதுக்கி வைத்த குற்றத்திற்காக மலேசியாவை சேர்ந்த ரவீந்திரன் மற்றும் குணசேகரன் ஆகிய இருவருக்கும் தலா 14 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.