மாவட்ட செய்திகள்

பஸ் மீது கார் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி 3 பேர் படுகாயம் + "||" + Car crash into bus 4 dead and 3 injured

பஸ் மீது கார் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி 3 பேர் படுகாயம்

பஸ் மீது கார் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி 3 பேர் படுகாயம்
டயர் வெடித்ததால் கார், பஸ் மீது மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.

தானே,

டயர் வெடித்ததால் கார், பஸ் மீது மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.

டயர் வெடித்தது

தானே மாவட்டம் பிவண்டியில் இருந்து மும்பை நோக்கி கார் ஒன்று நேற்று காலை 10 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. இந்த காரில் 7 பேர் அமர்ந்திருந்தனர். காரை சுபாஷ் நகரை சேர்ந்த நிரவ் மேத்தா(வயது33) என்பவர் ஓட்டி வந்தார். பிவண்டி மான்கோலி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென காரின் முன் பக்க டயர் வெடித்தது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

இதில், கார் அந்த வழியாக வந்து கொண்டு இருந்த தானே மாநகராட்சி பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் இருந்த 7 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

4 பேர் பலி

இது பற்றி தகவல் அறிந்த நார்போலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 7 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பது தெரியவந்தது. படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் மும்பை ஜே.ஜே மருத்துவமனைக்கும், டோம்பிவிலி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள், கார் டிரைவர் நிரவ் மேத்தா, டோம்பிவிலியை சேர்ந்த விக்ராந்த்(24), மிராரோடு பகுதியை சேர்ந்த நிரஜ், மாகிர் உத்கேர்(23) ஆகியோர் என்பதும், காயமடைந்தவர்கள் வைபவ் சேடா(24), ரமேஷ் சாம்பாஜி பட்டேல்(22), சந்தோஷ் மிஸ்ரா (24) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

போக்குவரத்து பாதிப்பு

போலீசார் பலியான உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை வேளையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.