மாவட்ட செய்திகள்

பிவண்டியில், சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய 9 பேர் பிடிபட்டனர் + "||" + In Bivandi, 9 people who illegally took the telephone exchange were caught

பிவண்டியில், சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய 9 பேர் பிடிபட்டனர்

பிவண்டியில், சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய 9 பேர் பிடிபட்டனர்
பிவண்டியில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானே மாவட்டம் பிவண்டியில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் செயல்பட்டு வருவதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுமார் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பிவண்டியில் உள்ள 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது பல இடங்களில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் செயல்பட்டு வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த கருவிகள், மடிக்கணினிகள், 438 சிம்கார்டுகள், செல்போன்கள், பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நியாஸ் அகமது சேக்(வயது49), முகமது சகீர் மோமின்(25), உமர்கான் (24), அர்‌ஷத் சேக்(35), புஜில் சேக்(28), சாம்சேத் அன்சாரி(26), முகமது சேக்(29), அலிம் சேக்(28), நதிம் அலிசேக்(28) ஆகிய 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், கடந்த 2 ஆண்டாக அவர்கள் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் நடத்தி அரசுக்கு ரூ.30 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேர் மீதும் சாந்திநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் கைதான 9 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.