மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த நேபாள பெண் திராவகம் குடித்து தற்கொலை கணவர் கைது + "||" + Nepalese woman succumbs to suicide

காதல் திருமணம் செய்த நேபாள பெண் திராவகம் குடித்து தற்கொலை கணவர் கைது

காதல் திருமணம் செய்த
நேபாள பெண் திராவகம் குடித்து தற்கொலை
கணவர் கைது
காதல் திருமணம் செய்த நேபாள நாட்டு பெண் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை, 

நேபாள நாட்டை சேர்ந்தவர் அர்ஜூன்சிங் (வயது30). இவர் அங்கு அம்ருதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் அம்ருதாவை மும்பை அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அண்டாப்ஹில்லில் உள்ள மகாடா கட்டிடத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பின் மனைவியை அர்ஜூன்சிங் தினசரி குடித்து விட்டு வந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அவரது தாயும் உடந்தையாக செயல்பட்டு உள்ளார்.

திராவகத்தை குடித்தார்

தனது காதல் கணவர் தன்னை துன்புறுத்தி வந்ததால் அம்ருதா வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவறை கோப்பையை கழுவ பயன்படுத்தப்படும் திராவகத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் உயிருக்கு போராடிய அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த அம்ருதாவின் தாய் மும்பை வந்து போலீசில் அர்ஜூன்சிங் மற்றும் அவரது தாய் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தாய், மகன் இருவர் மீதும் அம்ருதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, அர்ஜூன் சிங்கை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது தாயை வலைவீசி தேடி வருகின்றனர்.