மாவட்ட செய்திகள்

குர்லா ரெயில் நிலையத்தில் பெண் வக்கீலை மானபங்கம் செய்த வாலிபர் பிடிபட்டார் + "||" + At Kurla Railway Station Female lawyer Ter affect The young man was caught

குர்லா ரெயில் நிலையத்தில் பெண் வக்கீலை மானபங்கம் செய்த வாலிபர் பிடிபட்டார்

குர்லா ரெயில் நிலையத்தில்
பெண் வக்கீலை மானபங்கம் செய்த வாலிபர் பிடிபட்டார்
குர்லா ரெயில் நிலையத்தில் பெண் வக்கீலை மானபங்கம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை, 

மும்பை சாந்தாகுருசை சேர்ந்த 34 வயது பெண் வக்கீல் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் குர்லா ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார்.

திடீரென அந்த வாலிபர் பெண் வக்கீலின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வக்கீல் சத்தம் போட்டார்.

அப்போது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

வாலிபர் கைது

பின்னர் அவர் குர்லா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சம்பவம் குறித்து ரெயில்வே போலீசில் அந்த பெண் வக்கீல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் வக்கீலை மானபங்கம் செய்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில், கைதான வாலிபர் பெயர் கவுதம் காம்பிளே (வயது30) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.