மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் 2 மகன்களை கடத்தியவர் கைது + "||" + woman refused marriage 2 sons Abductor Arrested

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் 2 மகன்களை கடத்தியவர் கைது

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் 2 மகன்களை கடத்தியவர் கைது
திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் 2 மகன்களை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை, 

மும்பை மலாடு மால்வாணி பகுதியில் 35 வயது பெண் ஒருவர் தனது 5 மற்றும் 7 வயது மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த இம்ரான் இஜாஸ்கான் (வயது37) என்பவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

இதன் காரணமாக அவர் அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டார். ஆனால் அந்த பெண் மறுத்து விட்டார். இதனால் இம்ரான் இஜாஸ்கான் அந்த பெண் மீது கடும் கோபத்தில் இருந்தார்.

சிறுவர்கள் கடத்தல்

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி அந்த பெண் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மகன்கள் இருவரையும் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பதறி போன அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த பெண்ணின் மகன்கள் இருவரையும் இம்ரான் இஜாஸ்கான் கடத்தி சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில், சிறுவர்கள் இருவரையும் இம்ரான் இஜாஸ்கான் கல்யாணில் உள்ள ஒரு ஓட்டலில் கடத்தி வைத்திருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் குறிப்பிட்ட ஓட்டலில் சென்று அதிரடி சோதனை நடத்தி, சிறுவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் இம்ரான் இஜாஸ்கானையும் அதிரடியாக கைது செய்தனர்.