மாவட்ட செய்திகள்

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 வங்கதேச வாலிபர்கள் சிக்கினர் + "||" + Fake passport Tried to go abroad 2 Bangladeshi youth trapped

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 வங்கதேச வாலிபர்கள் சிக்கினர்

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 வங்கதேச வாலிபர்கள் சிக்கினர்
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 வங்கதேச வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று சார்ஜா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட்டை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது 2 பயணிகள் வைத்திருந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் இருவரையும் பிடித்து சகார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் கைது

இதில், கைதான இருவரும் வங்கதேசத்தை சேர்ந்த ஆரிப் உல் இஸ்லாம்(வயது24), ரஷித் உல் இஸ்லாம் (23) என்பது தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் மேகாலயா வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். பின்னர் குஜராத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் போலி ஆதார் அட்டை மற்றும் பான்கார்டை பயன்படுத்தி பாஸ்போர்ட்டை வாங்கியது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.