போலி ஆதார் அட்டை தயாரித்து விற்ற வாலிபர் கைது


போலி ஆதார் அட்டை தயாரித்து விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 May 2018 11:55 PM GMT (Updated: 20 May 2018 11:55 PM GMT)

அந்தேரியில் போலி ஆதார் அட்டை தயாரித்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஒரு கடையில் போலி ஆதார் அட்டைகள் தயாரிக்கப்படுவதாக டி.என். நகர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட கடையில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, அந்த கடையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த போலி அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலி ஆதார் அட்டைகளை தயாரித்து வந்த அப்துல் வகாப் சேக் (வயது23) என்ற வாலிபரை கைது செய்தனர்.

மேலும் கடையில் இருந்த போலி ஆதார் அட்டைகள் தயார் செய்ய பயன்படுத்தி வந்த பயோமெட்ரிக் ஸ்கேனிங் கருவி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். விசாரணையின் போது, போலி ஆதார் அட்டைகள் தயாரித்து அவற்றை தலா ரூ.1,200-க்கு விற்பனை செய்து வந்ததாக கூறினார்.

பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் ஒப்படைத்தனர்.


Next Story