மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது + "||" + The company carrying out the Rs 27 crore financial fraud: 2 arrested

நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது

நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடி : 2 பேர் கைது
மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.27 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

மும்பையில் உள்ள குயிக் டெக்னாலஜி என்ற நிதி நிறுவனம் தன்னிடம் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தது. இதை நம்பிய பலர் அந்த நிதி நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் பணத்தை முதலீடு செய்து உள்ளனர்.

ஜூலை மாதம் வரை வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் வட்டி தொகையை கொடுத்து உள்ளது. அதன்பின்னர் கொடுக்கவில்லை. இதுபற்றி வாடிக்கையாளர்கள் கேட்ட போது, அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சரியாக பதில் அளிக்க வில்லை.

இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் சாக்கிநாக்கா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த நிதி நிறுவனத்தின் துணை தலைவர் சுமித் கைலாஷ் சர்மா (வயது30), நிர்வாக அதிகாரி சுமைல் கான் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மாதந்தோறும் வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.27 கோடி வரை பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு ராகுல் சக்சேனா என்பவர் தான் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வாசுதேவநல்லூரில் தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.30 ஆயிரம் மோசடி வங்கி முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வாசுதேவநல்லூரில் தொழிலாளியிடம் ஆன்லைன் மூலம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
2. மும்பை ஏற்றுமதி நிறுவனத்திற்கு வாழைப்பழம் விற்பனை செய்வதாக ரூ.17 லட்சம் மோசடி
கம்பத்தில் இருந்து மும்பை ஏற்றுமதி நிறுவனத்திற்கு வாழைப்பழம் விற்பனை செய்வதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையை சேர்ந்தவர் இந்தர்பால்சிங் (வயது 64). இவர் பழ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
3. வங்கியில் ரூ.4 கோடியே 95 லட்சம் மோசடி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
ஆலங்குடியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.4 கோடியே 95 லட்சம் மோசடி செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேலாளர் மற்றும் அவருடைய மனைவி மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. பட்டாபிராமில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.12¾ லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் தரகர் கைது
பட்டாபிராமில், வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.12 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் தரகரை போலீசார் கைது செய்தனர்.
5. ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் மோசடி - 2 பேர் கைது
கோவையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-