மாவட்ட செய்திகள்

பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் + "||" + Those who contaminate the public are fine up to Rs. 500

பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம்

பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம்
பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுவதாக மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய அரசு தூய்மை இந்தியா திட்டத்துக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

இதன்படி நகரங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மாற்றும் நடவடிக்கையாக பொது இடத்தில் குப்பைகளை வீசுதல், எச்சில் உமிழ்தல், திறந்த வெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் ஆகியவற்றை தடுக்க மராட்டிய அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


இதன் மூலம் மராட்டிய அரசு மாநிலத்தில் உள்ள 27 மாநகராட்சி மற்றும் 236 நகராட்சிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

அந்த உத்தரவில் பொது இடத்தில் எச்சில் உமிழ்பவர்களுக்கு ரூ.150, குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.180, திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு ரூ.200, மலம் கழிப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும்படி கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை; 9 கடைக்காரர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 9 கடைக்காரர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
2. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அபராதம்
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கடலூர் நகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார்.
3. போக்குவரத்து விதிகளை மீறிய 11,966 பேருக்கு ரூ.53½ லட்சம் அபராதம் - அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 11,966 பேருக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.53½ லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
4. மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் போலீசாருக்கு மாவட்ட சூப்பிரண்டு எச்சரிக்கை
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சூப்பிரண்டு ஜோர்ஜிஜார்ஜ் எச்சரித்து உள்ளார்.
5. பாலித்தீன் பைகள் விற்கும் கடைகளுக்கு அபராதம் - கலெக்டர் உத்தரவு
பாலித்தீன் பைகள் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.