மாவட்ட செய்திகள்

ரூ.15 கோடி செலவில்மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள் அமைக்க திட்டம்மும்பை மாநகராட்சி தகவல் + "||" + At a cost of Rs 15 crore The project set up under flyovers parks

ரூ.15 கோடி செலவில்மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள் அமைக்க திட்டம்மும்பை மாநகராட்சி தகவல்

ரூ.15 கோடி செலவில்மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள் அமைக்க திட்டம்மும்பை மாநகராட்சி தகவல்
மும்பையில் ரூ.15 கோடி செலவில் மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
மும்பை, 

மும்பையில் ரூ.15 கோடி செலவில் மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள்

மும்பையில் மாட்டுங்கா மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கும், மாலை நேரங்களில் அமர்ந்து பேசுவதற்கும் இந்த பூங்காக்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் மேம்பாலங்கள் கீழ் பூங்காக்கள் அமைப்பது நகரை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.

ரூ.15 கோடி செலவில்....

இந்தநிலையில் அந்தேரி, கோரேகாவ் உள்ளிட்ட 22 இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் நடைமேம்பாலங்கள் கீழ் உள்ள பகுதிகளில் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட உள்ளது. கோரேகாவில் உள்ள வீர் சாவர்க்கர் மேம்பாலத்தின் கீழ் 24 ஆயிரத்து 467 சதுர மீட்டர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அந்த பூங்காவில் நடைப்பயிற்சி தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.

இதுதவிர கோரேகாவ் மிரனால்தாய் கோரே மேம்பாலம், தகிசர் ஆனந்த்நகர் மேம்பாலம், அந்தேரி கோகலே மேம்பாலம், ஜோகேஸ்வரி பாலாசாகிப் தாக்கரே மேம்பாலத்தின் கீழும் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘இந்த திட்டத்திற்கான டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. டெண்டர் விடப்பட்ட 3 அல்லது 4 மாதங்களில் பணி முடிந்துவிடும்’’ என்றார்.