மாவட்ட செய்திகள்

இந்தி பட தயாரிப்பாளர்ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டுவேலைக்காரர்களிடம் விசாரணை + "||" + Hindi film maker Rs 60 thousand theft in Ekta Kapoor home

இந்தி பட தயாரிப்பாளர்ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டுவேலைக்காரர்களிடம் விசாரணை

இந்தி பட தயாரிப்பாளர்ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டுவேலைக்காரர்களிடம் விசாரணை
இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,

இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் திருட்டு

இந்தி பட தயாரிப்பாளரும், இயக்குனருமான ஏக்தா கபூர் ஜூகு பகுதியில் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த வாரம் தனது கைப்பையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்து இருந்தார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியில் செல்வதற்காக அந்த பையை எடுத்து பார்த்தார். அப்போது, பையில் இருந்த பணத்தில் ரூ.60 ஆயிரம் காணாமல் போயிருந்தது.

இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் இதுபற்றி கேட்டார்.

போலீஸ் விசாரணை

ஆனால் அவர்கள் பணம் காணாமல் போனது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர். இதையடுத்து அவர் பணம் திருட்டு போனது குறித்து ஜூகு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள், ஏக்தா கபூரின் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தான் யாரோ பணத்தை திருடி இருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக போலீசார் வேலைக்காரர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.