மாவட்ட செய்திகள்

எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார்முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல் + "||" + In the opposition line To sit back Ashok Chavan is hurrying Chief Minister Fadnavis tease

எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார்முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்

எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார்முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என கருத்து கூறிய அசோக் சவான், எதிர்க்கட்சி வரிசையில் அமர அவசரப்படுவதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தார்.
மும்பை,

மராட்டியத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளும், 48 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் மராட்டியம் ஆகும்.

மராட்டிய சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் தான் நடைபெற வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக சமீப காலமாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

அவுரங்காபாத்தில் நேற்று முன்தினம் இரவு ஜனசங்கர்ஷ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான், இந்த மாதம் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும். மராட்டிய சட்டசபை கலைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தேர்தலையும் ஒரே நேரத்தில் சந்திக்க தயாராகுமாறு கட்சி தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் நவாப் மாலிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்த கருத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டலடிக்கும் வகையில் பதில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர அசோக் சவான் அவசரப்படுகிறார். நாங்கள் தேர்தலை அதற்குரிய நேரத்தில் தான் நடத்துவோம். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு இல்லை என்று தேேவந்திர பட்னாவிஸ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு காங்கிரஸ் சார்பில் 50 பிரசார கூட்டங்கள் அசோக் சவான் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு 50 பிரசார கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக மாநிலத்தலைவர் அசோக் சவான் தெரிவித்தார்.
2. எதிர்க்கட்சி தலைவர்களை நாய் என்று கூறுவதா? முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் - அசோக் சவான் வலியுறுத்தல்
மும்பையில் நடந்த பா.ஜனதா இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
3. விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார்.
4. ஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளை எங்களது கூட்டணியில் சேர்ப்போம் : அசோக் சவான் பேட்டி
ஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளையும் எங்களது கூட்டணியில் சேர்ப்போம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.
5. ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் : அசோக் சவான்
ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என அசோக் சவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.