மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கைவாலிபருக்கு சரமாரி அடி, உதை + "||" + Pornography before college student Wear to the young lady, kick

கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கைவாலிபருக்கு சரமாரி அடி, உதை

கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கைவாலிபருக்கு சரமாரி அடி, உதை
சாந்தாகுருசில் கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட வாலிபரை மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று இரவு அங்குள்ள பூங்காவுக்கு சென்றிருந்தார். அங்கு தனது தோழிக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது மாணவியின் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மாணவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.

இதனால் தர்மசங்கடமான நிலையை உணர்ந்த மாணவி அங்கிருந்து சென்று வேறொரு இடத்தில் அமர்ந்தார். அங்கும் வந்த அந்த வாலிபர் மாணவியின் முன்னால் ஆபாச செய்கையில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்து தகவலை கூறினார். அங்கு வந்த மாணவியின் நண்பர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபரை வகோலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் வாகித் அலி (வயது29) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி பெண் அதிகாரி காயம் தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அடி-உதை 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே கார் மோதி பெண் அதிகாரி காயம் அடைந்தார். இதனை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலரை அடித்து உதைத்ததாக சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை