மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது திராவகம் வீசியரவுடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலைபுனேயில் பரபரப்பு + "||" + Rudy shot dead by suicide Thrill in Pune

வாலிபர் மீது திராவகம் வீசியரவுடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலைபுனேயில் பரபரப்பு

வாலிபர் மீது திராவகம் வீசியரவுடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலைபுனேயில் பரபரப்பு
வாலிபர் மீது திராவகம் வீசிய ரவுடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனே,

வாலிபர் மீது திராவகம் வீசிய ரவுடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திராவக வீச்சு

புனேயை சேர்ந்தவர் ரோகித் (வயது25). இவர் சம்பவத்தன்று சதாசிவ் பேத், திலக் ரோடு பகுதியில் நின்று பெண் ஒருவருடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த திராவகத்தை எடுத்து ரோகித்தின் மீது வீசினார். இதில் அவர் உடல் வெந்து வலியால் அலறி துடித்தார்.

எனினும் வலியோடு வாலிபர் அங்கிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று ஓட முயன்றார். ஆனால் மீண்டும் அந்த நபர் ரோகித் மீது துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக குண்டு அவர் மீது பாயவில்லை.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்தநிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அந்த நபரை பிடிக்க முயன்றனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அந்த நபரை துரத்தி சென்றனர். இதில் அவர் ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து மாடிக்கு சென்றார். மேலும் போலீசாரை நோக்கி 2 முறை சுட்டார்.

இதையடுத்து போலீசார் சரண் அடைந்துவிடுமாறு மாடியில் இருந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனால் அவர் போலீசில் சரண் அடையாமல் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொண்டார். இதில் அவரது தலையில் குண்டு துளைத்தது. அப்போது அவர் மாடியில் இருந்து தவறி கட்டிட சிலாப்பில் விழுந்தார்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த நபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

ரவுடி

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ரோகித் மீது திராவகத்தை வீசிவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவர் சித்தாரம் கல்செட்டி (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் ரவடி என்பதும் தெரியவந்தது.

ரோகித்தின் தாய் சித்தாரம் கல்செட்டி மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த விரோதத்தில் ரோகித்தை பழிவாங்க முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய நேர்ந்து விட்டது.

இதற்கிடையே திராவகம் வீசப்பட்டதில் படுகாயமடைந்த வாலிபருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புனே திலக்ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை