மாவட்ட செய்திகள்

கல்யாணில் தீ விபத்து 30 குடோன்கள் எரிந்து நாசம் + "||" + Fire accident in Kalyan 30 Gudons burned down

கல்யாணில் தீ விபத்து 30 குடோன்கள் எரிந்து நாசம்

கல்யாணில் தீ விபத்து 30 குடோன்கள் எரிந்து நாசம்
கல்யாணில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 30 குடோன்கள் எரிந்து நாசமானது.
தானே,

தானே மாவட்டம் கல்யாண் சீல்பாட்டா பகுதியில் பழைய பொருட்கள் வைக்கும் குடோன்கள் உள்ளது. நேற்று அந்த குடோன் அருகே குவித்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர் கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற னர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்து அங்குள்ள குடோன்களுக்கு பரவியது.


இதையடுத்து அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ அங்குள்ள ஏராளமான குடோன்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீயணைப்பு படையினர் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 30 குடோன்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில வாகனங்களும் தீக்கிரையாகின. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில் பரபரப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து, சிலிண்டர்கள் வெடித்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.
2. மாட்டுங்காவில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ : ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்
மாட்டுங்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின.
3. தாளவாடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து
தாளவாடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
4. கொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
5. வேலூரில், 3 சொகுசு பஸ்கள் எரிந்து நாசம் - ‘வெல்டிங்’ வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் விபரீதம்
வேலூரில் பஸ்களுக்கு பாடிகட்டும் இடத்தில், ‘வெல்டிங்’ வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறி காரணமாக 3 சொகுசு பஸ்கள் எரிந்து நாசமாயின.