மாவட்ட செய்திகள்

முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் அமித் ஷாவுடன் சந்திப்பு + "||" + Chief minister Patnavis Headed State BJP senior officials meet with Amit Shah

முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் அமித் ஷாவுடன் சந்திப்பு

முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் அமித் ஷாவுடன் சந்திப்பு
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் டெல்லியில் கட்சியின் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர்.
மும்பை,

மராட்டியத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே மத்திய மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார். எனவே மராட்டியத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதேபோல விரைவில் மாநில மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில் மூத்த நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், வரும் தேர்தல்களில் பா.ஜனதா வேட்பாளர் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளருக்கும் கடினமாக உழைக்கவேண்டும் என அமித்ஷா கூறினார். அப்போது தான் எல்லா மாநிலங்களிலும் நம்மால் வெற்றி பெறமுடியும் என எங்களிடம் தெரிவித்தார், என்றார்.

இந்த சந்திப்பில் முதல்-மந்திரியுடன் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, மூத்த மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவ்டே, மும்பை தலைவர் ஆசிஸ் செலார் உள்ளிட்ட 16 மூத்த நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பில் புதிய மாநில தலைவர் நியமனம், மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேசப்படவில்லை என அமித்ஷாவை சந்தித்த குழுவில் இடம்பெற்று இருந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எமெர்ஜென்சியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி- அமித்ஷா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக மோடியும், அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.
2. பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு சர்ஜிகல் ஸ்டிரைக் - அமித் ஷா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
3. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாலங்கள், நடைமேம்பாலங்கள் கட்ட வேண்டும் : அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவு
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாலங்கள், நடைமேம்பாலங்களை கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
4. ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.
5. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பை டெல்லி போலீஸ் அதிகரித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...