மாவட்ட செய்திகள்

விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை + "||" + Hijacking caused panic Mumbai businessman sentenced to life imprisonment

விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை

விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை
விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு சிறப்பு கோர்ட்டுஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் பிர்ஜூ சல்லா. தொழில் அதிபர். இவர் மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பயணம் செய்தார்.

அப்போது, ‘‘இந்த விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீருக்கு கடத்தப்படுகிறது’’ என ஆங்கிலத்திலும், உருது மொழியிலும் ஒரு துண்டு சீட்டில் எழுதி கழிவறையில் உள்ள பெட்டியில் போட்டார்.

இது பற்றி அறிந்த விமான ஊழியர்களும், பயணிகளும் பீதி அடைந்தனர். உடனடியாக அந்த விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விசாரணைக்கு பின்னர் தான் அது கடத்தல் பீதி என்றும், அதை எழுதியவர் பிர்ஜூ சல்லா என்றும் தெரியவந்தது. இதையடுத்து பிர்ஜூ சல்லா கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடத்தல் பீதி ஏற்படுத்திய பிர்ஜூ சல்லாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கணவரை காப்பாற்ற முயன்ற பெண் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கணவரை காப்பாற்ற முயன்ற பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2. விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை - விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு
விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. நெல்லை பேட்டையில் கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை பேட்டையில் கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
4. பாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
பாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
5. மைக்செட் உரிமையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு
மைக்செட் உரிமையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.