மாவட்ட செய்திகள்

மும்பை ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின்13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்புஉயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி + "||" + Mumbai train blasts 13th Memorial Day Tribute to the dead

மும்பை ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின்13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்புஉயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மும்பை ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின்13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்புஉயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மும்பை,

மும்பை ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ரெயில் குண்டுவெடிப்பு

மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள மாட்டுங்காரோடு, மாகிம், பாந்திரா, கார்ரோடு, ஜோகேஸ்வரி, போரிவிலி, பயந்தர் ஆகிய 7 ரெயில் நிலையங்களில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலைமாதம் 11-ந் தேதி 11 நிமிட இடைவெளியில் மின்சார ரெயில்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்தகுண்டுகள் வெடித்து சிதறின.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் அப்பாவி பயணிகள் 209 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். மின்சார ரெயில்கள் உருக்குலைந்தன. இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

அஞ்சலி

நாட்டையை உலுக்கிய மும்பை தொடர் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 13-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மாகிம் ரெயில் நிலையத்தில் உள்ள நினைவிடத்தில், ரெயில் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் பலரும் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த குண்டுவெடிப்பில் தங்களது குடும்ப உறவுகளை இழந்தவர்களும் திரளாக வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ரெயில் குண்டுவெடிப்பு நினைவு தினத்தையொட்டி மும்பை ரெயில் நிலையங்களில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.