மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு + "||" + Rs.1 lakh reward for driving an auto at the railway station to help pregnant women

கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு

கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு
கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசை சிவசேனா இளைஞர் அணி வழங்கியது
மும்பை, 

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள விரார் ரெயில் நிலையத்தில் நின்ற மின்சார ரெயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, ரெயில் நிலையத்திற்கு வெளியே சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர் சாகர் கம்லாகர் கவாட் (வயது34) என்பவர் இதை அறிந்ததும் சற்றும் தாமதிக்காமல் தனது ஆட்டோவை ரெயில் நிலைய பிளாட்பாரத்திற்குள் ஓட்டிச்சென்று அந்த கர்ப்பிணியை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார். ரெயில் நிலைய பிளாட்பாரத்துக்குள் வாகனங்கள் வருவது குற்றம் என்பதால் அவர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில், கர்ப்பிணிக்காக ரெயில் நிலையத்திற்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்ற சாகர் கம்லாகர் கவாட்டியின் மனிதாபிமானத்தை பாராட்டும் வகையில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தார். அதற்கான காசோலையை விரார் பகுதி சிவசேனா இளைஞரணி நிர்வாகிகள் சாகர் கம்லாகர் கவாட்டின் வீட்டுக்கு சென்று அவரிடம் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்துக்கொலை தோழியுடன் மனைவி கைது
நெற்குன்றத்தில், ஆட்டோ டிரைவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் தோழியை போலீசார் கைது செய்தனர்.
2. வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவர் கைது
வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை
தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4. மனைவி கண் எதிரே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை மகளின் திருமண வரவேற்புக்கு சென்றபோது மர்ம கும்பல் தீர்த்து கட்டியது
அயனாவரத்தில், மனைவி கண் எதிரே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மகளின் திருமண வரவேற்புக்கு செல்ல முயன்றபோது மர்ம கும்பல் வழிமறித்து தீர்த்து கட்டியது.
5. போலீஸ்காரரை கண்டித்து, மகனுடன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி - பண்ருட்டியில் பரபரப்பு
பண்ருட்டியில் போலீஸ்காரரை கண்டித்து ஆட்டோ டிரைவர் மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.