மாவட்ட செய்திகள்

கடற்படை அதிகாரி மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில்சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு + "||" + Naval officer rapes daughter Jail for 2 people

கடற்படை அதிகாரி மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில்சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கடற்படை அதிகாரி மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில்சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
கடற்படை அதிகாரியின் மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,

கடற்படை அதிகாரியின் மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுமி கற்பழிப்பு

மும்பையை சேர்ந்த கடற்படை அதிகாரி தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் கடற்படை ஊழியர் (வயது35) ஒருவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து நண்பராக பழகி வந்தார்.

இந்தநிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடற்படை ஊழியர் சிறுமியை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார். மேலும் சிறுமியை மிரட்டி அப்பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் (29), கப்பல் மாலுமி உள்பட 3 பேர் சேர்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கற்பழித்து உள்ளனர்.

சிறை தண்டனை

இதுபற்றி அறிந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடற்படை ஊழியர், ஒப்பந்ததாரர், மாலுமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் கடற்படை ஊழியர், ஒப்பந்ததாரர் மீதான ஆதாரம் நிரூபமணமானது. இதையடுத்து கோர்ட்டு, கடற்படை ஊழியருக்கு 10 ஆண்டும், ஒப்பந்ததாரருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இதில் மாலுமி மீதான ஆதாரம் நிரூபணமாகாததால் விடுதலை செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாக உள்ளதால் அவரை ஆஜர்படுத்த போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.