மாவட்ட செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - தசரா பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு + "||" + In Ayodhya Special legislation to build Rama Temple At the Dasara General Assembly Uthav Thackeray Exciting talk

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - தசரா பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - தசரா பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என மும்பையில் நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை,

மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் ஆண்டுதோறும் சிவசேனா கட்சி சார்பில் தசரா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று தசராவையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் சிவாஜிபார்க்கில் குவிந்தனர். இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-

ராமர் கோவில் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அதுபற்றி யாரும் பேச வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அந்த வழக்கு 35 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.

ராமர் ராவணனை வதைத்த நாளில் (தசரா) நீதிமன்றங்கள் விடுமுறையில் உள்ளன. அவர் அயோத்திக்கு திரும்பும் நாளிலும் (தீபாவளி) நீதிமன்றங்கள் மூடப்படுகின்றன.

ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் அயோத்தியில் ராமர் பிறந்தாரா? என்பது தான்.

அயோத்தி வழக்கில் இந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. அரசியலுக்காக ராமர் கோவிலை சிவசேனா கோரவில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியலுக்கு மேலானது ராமர் கோவில் பிரச்சினை.

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கும், ராமர் கோவில் பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை. எங்களுக்கு வில் அம்பு சின்னம் கிடைத்த போது ராமர் கோவில் பிரச்சினை இல்லை.

தங்கர் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது. இந்தியாவை நேசிக்கும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக சிவசேனா போராடும். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்பது சிவசேனாவின் பல ஆண்டு கோரிக்கை ஆகும். மாநிலத்தின் நலனுக்காக பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டி இருந்தது. சிவசேனாவின் வசமிருந்த தொகுதிகள் பல கூட்டணி கட்சியினருக்கு சென்றதற்காக சிவசேனாவினரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.