மாவட்ட செய்திகள்

பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி + "||" + There was a consensus before the election on the sharing of the post of first minister - Interview with Sanjay Rawat

பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி

பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி
தேர்தலுக்கு முன் பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஒருமித்த கருத்து இருந்தது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதல் காரணமாக புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எப்போது ஒருமித்த கருத்து உருவாகும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், இரண்டு கட்சிகளுக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது என்றார்.

ஆட்சி அமைக்க புதிய திட்டங்கள் உள்ளதா என்ற கேள்வியை நிராகரித்த சஞ்சய் ராவத், தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதை செயல்படுத்துவதை (ஆட்சியில் சமபங்கு) தான் சிவசேனா எதிர்பார்க்கிறது.

இதுபற்றி விவாதிக்க தான் விரும்புகிறோம். புதிய திட்டங்களில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். எந்த ஒரு புதிய திட்டமும் பெறப்படவும் இல்லை. அனுப்பப்படவும் இல்லை.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம். அதை செய்ய சதி செய்பவர்கள் மக்களின் தீர்ப்பை அவமதிக்கிறார்கள்.

விவசாயிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் சிவசேனா மீது நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கு தீர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆட்சி அமைய மேலும் தாமதம் ஏற்படும்; சஞ்சய் ராவத் சொல்கிறார்
அயோத்தி வழக்கு தீர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆட்சி அமைய மேலும் தாமதம் ஆகும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.
2. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கான சூழலை பாரதீய ஜனதா உருவாக்குகிறது -சஞ்சய் ராவத் தாக்கு
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை பாரதீய ஜனதா உருவாக்குகிறது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.
3. குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை; அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம் - சஞ்சய் ராவத் பேட்டி
சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்-மந்திரி என்று மீண்டும் திட்டவட்டமாக கூறிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை, அரசியல் மாற்றத்துக்காக தான் போராடுகிறோம் என்றார்.
4. மாநிலத்தில் நிலவும் ‘அரசியல் குழப்பத்துக்கு சிவசேனா காரணம் அல்ல’; கவர்னரிடம் சஞ்சய் ராவத் விளக்கம்
மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்குசிவசேனா காரணம் அல்ல என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கவர்னரிடம் விளக்கம் அளித்தார்.
5. தூங்கி கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு விழித்து கொண்டது - சஞ்சய் ராவத் சொல்கிறார்
சரத்பவார் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையால், தூங்கி கொண்டு இருந்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு விழித்து கொண்டது என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.