மாவட்ட செய்திகள்

ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறிவுறுத்தல் + "||" + RSS leader advises to Devendra Patnaik

ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறிவுறுத்தல்

ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறிவுறுத்தல்
ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபடவேண்டாம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் விட்டுவிடுங்கள். எதிர்க்கட்சியாக இருக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மையை பெறுவதற்காக குதிரை பேரம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அதேபோல சிவசேனா இல்லாமல் ஆட்சி அமைக்க வேண்டாம் எனவும் மோகன் பகவத் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் பலி
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் பலியானான்.