மாவட்ட செய்திகள்

தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது + "||" + Shiv Sena fears that their MLAs will be hunted by Bajanata; Congress says

தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது

தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது
தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என்று சிவசேனா பயப்படுகிறது என மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறியுள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இருந்தும் சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதால் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘‘சிவசேனாவும், பா.ஜனதாவும் மெகா கூட்டணி கட்சிகள். தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது. இதில் இருந்தே பா.ஜனதா எவ்வளவு ஊழல் நிறைந்த கட்சி என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இதனால் தான் நாம் அவர்களிடம் இருந்து மராட்டியத்தை காப்பாற்ற வேண்டும். மெகா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தார்மீக உரிமை இருக்கிறதா?’’.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்கி விடும் என சிவசேனா பயப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட்டும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 8 மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது - காங்கிரஸ்
காங். பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் உட்பட 8 மாநிலங்களவைக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2. காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது; ஜோதிர் ஆதித்யா சிந்தியா
காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்று ஜோதிர்ஆதித்யா சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
3. அமைச்சர் நமச்சிவாயம் திடீர் மாற்றம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமனம்
புதுவை காங்கிரஸ் தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயம் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி
டெல்லி வன்முறை: அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ராகுல்காந்தி கூறி உள்ளார்.
5. விலைவாசி உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து, மகிளா காங்கிரசார் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.